விசுவாசம் Jeffersonville, Indiana, USA 61-0813 1ஆனால், கிரியை செய்வதற்கு தேவன் பேரிலுள்ள விசுவாசத்தை உபயோகித்தாக வேண்டும். பாருங்கள், ஆகவே நீங்கள் உங்களுடைய சொந்த உயிர்த்தெழுதலை உங்களுக்குள்ளே பெற்றிருக்கிறீர்கள். உங்கள் உயிர்த்தெழுதல் உங்களுக்குள், உங்கள் ஆவியில் நிலை கொண்டு இருக்கிறது. நான் அறிந்திருக்கிறேன், இயேசு சிலுவையில் மரித்தபோது “அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குள் இறங்கி அங்கே நோவாவின் நீடிய பொறுமையான நாட்களில் மனந்திரும்பாத காவலில் உள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தது”. அவருடைய சரீரம் கல்லறைக்குள் சென்றது, ஆனால் அவர் மரிக்கு முன், தன்ஆவியை தேவனுடைய கரங்களில் ஒப்புக் கொடுத்தார். தேவனுடைய கரத்தில்… “உம்முடைய கரங்களில் என்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக். 23:46) ஆகவே, நீங்கள் பாருங்கள், அவருடைய ஆவி தேவனிடத்திற்கு சென்றது, அவருடைய ஆத்துமா பாதாளத்திற்கு சென்றது, அவருடைய சரீரம் கல்லறைக்கு சென்றது. இப்போது, அவருக்குள் இருந்த அந்த ஆவியானது தேவனுடைய ஆவி ஆகும். “அதே ஆவியானவர், பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும், வகைவகையாகவும், தீர்க்கதிரிசிகளை அபிஷேகித்தும், இந்த கடைசி நாட்களில் கிறிஸ்துவின் மூலமாகவும்; இப்பொழுது இங்கே இந்த நாட்களில் சுவிஷேசத்தின் மூலமாகவும், ஜனங்களுக்கு செய்தியை கொண்டு வருகிறார். 2இப்பொழுது நம்முடைய தேவை எல்லாம் கிறிஸ்துவை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்வதே! அது தான் நித்தியஜீவன். இப்பொழுது, கிறிஸ்து மூன்று நாட்கள் நிறைவடையுமட்டாக திரும்பி வர முடியாது. ஏனென்றால், ஒரு இரும்பு சட்டம் போன்ற, இதைப்போல், திரைக்கு பின் அவருடைய ஆவியானது இருந்தது, அவரால் அந்த சட்டத்தை தாண்டி வர இயலாது, ஏனெனில்,“மூன்று பகலும், மூன்று இரவும் கல்லறையில் இருக்க வேண்டும்” என்பது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாய் இருந்தது. இப்பொழுது மூன்று பகலும், மூன்று இரவும் முடியுமட்டாக அவரால் திரும்பி வர இயலாது. அந்த மூன்று பகலும், மூன்று இரவும் முடிந்த பொழுது அவருடைய ஆவி கட்டவிழ்க்கப்பட்டது. அந்த ஆவி நேரடியாக அவருடைய ஆத்துமாவுக்குள் சென்று, அந்த ஆத்துமா, திரும்ப வந்து அவருடைய சரீரத்தை எடுத்து கொண்டு “என் ஜீவனை விடவும், அதை மறுபடியும் எழும்பப் பண்ணவும், எனக்கு வல்லமை உண்டு. எனக்கு வல்லமை உண்டு”, என்று அவர் உரைத்த வார்த்தையை நிறைவேற்றினது. 3இப்பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த விதமாகவே வல்லமை உண்டு, ஏனெனில் நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள்; இந்த காலை, உங்களில் இருக்கிற அதே ஆவியானவர், உங்களில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் அந்த அதே பரிசுத்த ஆவியானவர் உங்களை மேலே எழும்பப் பண்ணுவார். ஆகவே, நீங்கள் உங்களை திரும்ப எழச் செய்யத்தக்கதான வல்லமையை உடையவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் மரிக்கும் போது, உங்கள் ஆத்துமா தேவனுடைய பலிபீடத்தின் கீழ் செல்லுகிறது. சரியாக தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக அல்ல. இப்பொழுது உங்கள்ஆவி தேவனிடத்திற்கு செல்கிறது. ஆனால் உங்களால் திரும்பி வர முடியாது, ஞாபகம் கொள்ளுங்கள். வேதாகமத்தில் கூறியுள்ள விதமாக அந்த ஆவி… “எவ்வளவு காலம், கர்த்தாவே? எவ்வளவு காலம்” என்று பலிபீடத்தின் கீழ் உள்ள ஆத்துமாக்கள் கதறுகின்றன. வேத வாக்கியங்கள் நிறைவேறும் வரை கிறிஸ்து எப்படி திரும்பி வரமுடியாமல் இருந்தாரோ, அப்படியே வேத வாக்கியங்கள் நிறைவேறும் வரை அவைகளும் திரும்பிவர முடியாது. பின்னர் எல்லாம் முடிந்தபின், எல்லா பாடுகளும் நிறைவேறிய பின் அந்த சகோதரர்கள் அதே விதமாய் பாடுபட்டபின், அல்லது நாம் அவர்களை போல் பாடுபட்டபின், மேலும் அந்த விதமாக அந்தநாளில் நீங்கள் எங்கு அடக்கம் பண்ணப்பட்டீர்கள் என்று திட்டவட்டமாக அறிவீர்கள். அப்பொழுது உங்கள் ஆவி தேவனிடத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு, உங்கள் ஆத்துமாவண்டைக்கு வருகிறது. 4இப்பொழுது அறிதலும், புரிந்து கொள்ளுதலுமுள்ள உங்கள் புத்தி கூர்மையான அந்த ஆத்துமா உங்கள் பாகமாய் இருக்கிறது. சமீபத்தில் நான் பெற்ற தரிசனம் அல்லது சிறிய மாற்றத்திற்குட்பட்டு (வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு), அந்த இடத்திற்கு சென்று அந்த மக்களை பார்த்ததை ஞாபகம் கொண்டுள்ளீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்- ஆசி). இப்பொழுது, புசிக்க மற்றும் அவ்விதமானவைகளை செய்ய அவசியமில்லாத அந்த சரீரத்திற்குள், (அந்த ஆத்துமா, அவ்விதமான சரீரத்திற்குள்) உங்கள் ஆவி திரும்பவரும். பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும், நமக்கென்று ஒன்று ஏற்கனவே காத்துக்கொண்டு இருக்கிறது. ஒரு பரலோக சரீரம், மேலும் அந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சிக்காக, அந்த ஆவி, ஆத்துமா, மற்றும் பரலோக சரீரத்தோடு உங்கள் இயற்கையான சரீரத்தை நீங்கள் மறுபடியும் எழுப்புவீர்கள்!பாருங்கள்? அதை செய்வதற்க்கான வல்லமை இப்போதே உங்களுக்குள் இருக்கிறது. ஆனால், இப்பொழுது உங்களுக்குள் இருக்கிற அந்த வல்லமையானது ஒருபுதிய உலகத்தை உண்டாக்கவல்லது. தேவனிடத்தில் சிறிய பலவீன பாகங்களும், மற்றும் பெரிய வல்லமை வாய்ந்த பாகங்களும் கிடையாது. தேவனுடைய எளிமையான, சிறிய தொடுதலே சர்வ வல்லமையுள்ளது. பாருங்கள், தேவனுடைய எளிமையான, சிறிய தொடுதல். ஆகவே, நீங்கள் அறிவீர்கள்? ஆகவே, இப்பொழுது நான் அந்த விசுவாசத்தில் உங்களை கொண்டுவர முயற்ச்சிக்கிறேன். 5கிறிஸ்தவன் என்ற முறையில் உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதை நீங்கள் அறிவீர்களா? (சபையார் ஆமென் என்று கூறுகிறார்கள்) நீங்கள் இங்கே கீழே அசிங்கத்தில், எல்லா அசுத்தம், மற்றும் பாவத்துடன், குடித்தலும், சூதாடுதல், மேலும் உலக காரியங்களின் ஊடாக சவாரி செய்து கொண்டிருந்தீர்கள். நல்லது, கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்தாரென்று நீங்கள் விசுவாசித்த மாத்திரத்தில்; அவைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டீர்கள். பாருங்கள், அவை எல்லாவற்றிற்க்கும் மேலாக. இப்போது நீங்கள் அதற்கு மேலே சவாரி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வந்த போது இந்த பாவமான வாழ்வை கடந்து மேலே வரும்படியான வல்லமையை பரிசுத்த ஆவியானவர் தர வல்லவர் என்று நீங்கள் விசுவாசம் கொள்ளுகிறீர்கள். நல்லது, நீங்கள் சுகமடைய, செய்யதக்க ஓரே காரியம் வெறுமனே அதிக விசுவாசத்தோடு மேலே உந்தி தள்ளிக் கொண்டு, சுகமளித்தலுக்குள் மேலாக கடந்து வருவதுதான். பாருங்கள் அதுதான் காரியம். கிறிஸ்தவர் அல்லாமல் சுகவீனமாய் இருக்கிற நீங்கள் இப்பொழுது கிறிஸ்தவர் ஆகுங்கள். நீங்கள் கிறிஸ்தவர் ஆவதினால் அந்த சுகமளிக்கும் வல்லமை உங்களுக்குள் வரும். பாவத்தின் மேலாக கடந்து வரும்படி அது உங்களுக்கு விசுவாசத்தை கொடுக்கிறது. அது உங்களுக்கு விசுவாசத்தை கொடுக்கும். இந்த யாத்திரையில் உங்களுக்கு தேவையானதெல்லாம் சரியாக இப்பொழுதே உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய ஓரே காரியம் தேவன் மேல் விசுவாசம் கொள்வதே. அது பரிசுத்த ஆவியினால் உங்களுக்குள் இருக்கிற நல்ல காரியங்களை வெளிக்கொண்டு வரும். இப்போது உங்களுக்கு தெளிவாக புரிகிறதா? நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? (சபையார் ஆமென் என்கிறார்கள் ஆசி) 6நான் நம்புகிறேன், பில்லி நேற்று இரவு என்னை அழைத்து, “இந்த காலையில், உள்ளே வாருங்கள், விஷேசமாக இந்த வாரம் நாம் அந்த ஏழு முத்திரைகளின் பேரில் ஆராதனைகளை கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒரு நபருக்காக” என்று கூறினான். மேலும் அவர்கள் ஒரு சுகவீனமான குழந்தையை கொண்டு வந்தார்கள் என்று நம்புகிறேன். ஐயா, நீங்கள் இப்போது இங்கிருந்தால் ஞாபகம் கொள்ளுங்கள், உங்களால் முடியாது… அது ஒரு சிறு பச்சிளம் குழந்தையாய் இருந்தால் உங்கள் விசுவாசம் அந்த குழந்தையின் பட்சமாய் செயல்பட வேண்டியதாய் உள்ளது. ஆனால், இப்பொழுது சற்றே நான் வேறொரு வேத வசனத்தை எடுக்கட்டும்! அது பரவாயில்லையா? (சகோ. நெவில், அப்படியே செய்யுங்கள் சகோதரனே ஆமென்…..ஆசி) இப்போது, பவுலும் சீலாவும் ஓர் இரவு சிறைச் சாலையில் இருந்தார்கள் என்று சுவிஷேங்களில், நான் நம்புகிறேன், அப்போஸ்தலர் நடபடிகள் 16ம் அதிகாரத்தில் வாசித்ததை சற்றே நினைவு கூறுங்கள். மேலும் குறிசொல்லுகிற ஒரு பெண்ணிடமிருந்த அசுத்த ஆவியை விரட்டியடித்ததினிமித்தம் அவர்கள் அடிக்கப்பட்டனர். மேலும், அதை குறித்து அவளும் அவளது எஜமானர்களும் கோபம் கொண்டனர். மேலும் அவர்களை அடித்து உட்சிறையில் வைத்தனர். அவ்வாறு செய்தபின் பவுலும் சீலாவும் ஜெபித்தபோது தேவன் ஒரு நிலநடுக்கத்தை அனுப்பி சிறைச்சாலையை அதிரச் செய்தார். 7அந்த பிலிப்பிய சிறை அதிகாரி ஒரு நூற்றுக்கதிபதியாய் இருந்தபடியால், சிறைக் காவலில் வைக்கப்பட்டவர்களை இழப்பதினால் தன் சொந்த ஜீவனை கிரயமாக அளிக்க நேரிடும் என்பதை அறிந்தவனாய், தன் பட்டயத்தை உருவி தற்கொலை செய்து கொள்ளப்போகும் போது பவுல் ஓடிச்சென்று “உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று கூறினான். பவுல் மற்றும் அவர்கள் மேல் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயமானது அந்த நூற்றுக்கதிபதியை இரட்சித்தது. அவர்கள் ஒருவேளை கீர்த்தனைகளை பாடியிருக்கலாம். அவர்கள் சாட்சி அளித்திருக்கலாம் அல்லது ஏதாவது செய்திருக்கலாம். ஆனால் என்னவாயிருந்தாலும் அவர்கள் பரிசுத்தவான்கள் என்பதை அவர்கள் (சிறை அதிகாரிகள்) அறிந்து இருந்தார்கள், அந்த மனிதர்களில் ஏதோ வித்தியாசத்தை அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில், “இரட்சிக்கப்படும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்? இரட்சிக்கப்படும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்”? என்று உடனடியாக அவன் கேட்டான். இப்போது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31) என்று பவுல் கூறினான். 8நல்லது, இப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிற விசுவாசம்.... அவனுடைய இரட்சிப்பு, வீட்டாரையும் இரட்சிக்கும் என்று அர்த்தமல்ல! ஆனால், அவன் தன் சொந்த இரட்சிப்பிற்காக தேவனில் போதுமான அளவு விசுவாசம் பெற்றவனாயிருப்பின், அவன் தன் வீட்டாருக்காகவும் அதே விசுவாசத்தை பெற்றிருக்க முடியும், மேலும் அவனுடைய வீட்டாரும் உள்ளே வர வேண்டும். பாருங்கள், அதே விதமாக. அன்றிரவு ஜார்ஜியாவில் நடந்த கூட்டத்தில் நான் சொன்னபடி, யோபு செய்த அதே விதமாகவே, யோபு கூறினான், இப்போது என் பிள்ளைகள் பாவம் செய்தார்களோ நான்அறியேன். ஆனால், ஒருவேளை அவர்கள் பாவம் செய்திருந்தால் என்ன ஆவது? என்று அவன் கூறினான். நீதிமானாகும்படி, யோபு செய்யத்தக்க காரியம் ஒன்று இருந்தது, அது தகனபலியை ஏறெடுப்பதே.ஒருவேளை அவன் பிள்ளைகள் பாவம் செய்திருந்தால், அவர்கள் பாவங்களில் இருந்து மன்னிக்கப்படும்படி, தான் ஒரு தகனபலியை ஏறெடுப்பேன் என்று கூறினான், அந்த தகப்பன் அவ்வாறு செய்தது நல்லது. அதுதான் ஒரு நல்ல எண்ணமுடைய தகப்பன். அவ்விதமான தகப்பன்மார்கள் இன்று நமக்கு அதிகம் தேவை, யோபு தகனபலியை ஏறெடுத்தான், அது அவனுடைய அவல நிலை ஏற்படுமுன். ஆனால் அவன் பிள்ளைகள் எல்லோரும் கொல்லப்பட்டு அவன் செம்மறி ஆடுகள் அனைத்தும் அழிக்கப்பட்ட பின், மேலும் அவனுடைவைகள் யாவும் எடுப்பட்டபின் அவன் தன் வீட்டின் பின்புறத்தில் சாம்பல் குவியலின் மேல் அமர்ந்து ஒரு சிறிய ஓட்டுத் துண்டினால் தன்னை சுரண்டிக் கொண்டிருந்தான். 9நீங்கள் கவனித்தீர்களா? அவனுடைய துக்க நாட்களுக்கு பின் தேவன் அவனுக்கு திரும்ப அளிக்க ஆரம்பித்ததை? அவனுக்கு இருந்த பத்தாயிரம் கால்நடைகளையும், மற்றவைகளையும்; இரட்டதத்தனையாக திரும்ப அளித்தார். மேலும் இரட்டத்தனையான செம்மறி ஆடுகளையும் மற்றும் சகலவற்றையும் இரட்டத்தனையாக்கினார், கவனித்தீர்களா? மேலும், தேவன் யோபுவின் ஏழு பிள்ளைகளையும் அவனுக்கு கொடுத்தார், அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? அந்த தகனபலி அவர்களுக்காக நின்றது. அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாய், மகிமையில், அவனுடைய வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தனர். இன்று அவன் அவர்களோடு இருக்கிறான். “நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” பாருங்கள்? இப்போது, நீதிமானாகும்படி தகனபலி ஏறெடுப்பதே யோபு செய்யத்தக்க ஒரே காரியமாய், இருந்தது. நீங்கள் நீதிமானாகும்படி செய்யத்தக்க ஒரே காரியம், அது தேவனில் விசவாசம் கொள்வதே. ஏனெனில், விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், விசுவாசத்தினால் சுகமடைகிறீர்கள், விசுவாசத்தினால் உங்களுக்குரிய எல்லாவற்றையும் நீங்கள் பெற்றுக் கொள்ளுகிறீர்கள். பாருங்கள்? விசுவாசத்தினால் நீங்கள் அதை நம்புகிறீர்கள். இப்போது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”. (அப். 16:31) 10இப்போது, ஐயா! ஜெபிக்கும்படியாக உங்களிடத்தில் குழந்தை இருக்குமானால், உங்களுக்கு நீங்களே விசுவாசியுங்கள், உங்கள் விசுவாசத்தோடு என் விசுவாசத்தை வைக்கும்படி நான் இங்கு இருக்கிறேன். நாம் ஒருங்கிணைந்து விசவாசிப்போம், தேவன் அந்த குழந்தையை சுகமடைய செய்வார். நீங்கள் பாருங்கள், அதை செய்வதற்கான வல்லமையை நமக்குள் பெற்றிருக்கிறோம். நீங்கள் அதைச் செய்யும்படியான வல்லமையை உங்களுக்குள் பெற்றிருக்கிறீர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதைச் செய்யும்படியான வல்லமையை பெற்றிருக்கிறான். ஆனால், இப்பொழுது நாம் மட்டும் அதை பெறமுடிந்தால்.... அந்த வல்லமையானது ஒரு விதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நான் அடிக்கடி சொல்கிறபடி, தண்ணீரை புவியீர்ப்பு விசை கட்டுப்படுத்துவது போல, ஏனெனில் அது ஒரு விதியாயிருக்கிறது. புவிஈர்ப்புவிசை தண்ணீரை கட்டுப்படுத்துகிறது. சூரியன், பூமியினால் அல்லது, பூமியின் சுழற்ச்சியினால் கட்டுப்படுத்தபடுகிறது. நீங்கள் சூரியனை ஏதோ ஒன்றை செய்ய வைக்க முடியாது. மேலும், நான் சிறிது நேரம் உறங்க விரும்புகிறேன், ஒரு மணி நேரம் தரித்திரு என்றால், அது அவ்விதமாய் செய்யாது. பாருங்கள், ஏனெனில் அதற்கு ஒருவிதி இருக்கிறது. நீங்கள் அந்த விதியின்படி செய்வீர்களானால், நல்லது, அப்பொழுது சகலமும் சரியாக இருக்கும். நீங்கள் நேரத்தோடு படுத்தால் நேரத்தோடு எழுந்திருக்க முடியும். ஆனால் நீங்கள்…… 11நமக்கு சுப்பீரியர் ஏரி (Superior Lake), ஆண்டேரியோ ஏரி (Ontario Lake), ஹியூரான் ஏரி (Huron Lake), போன்ற மகத்தான பெரிய ஏரிகள் இங்கு உண்டு. நவேதா, கலிஃபோர்னியா, அரிஸோனா, மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய இடங்களில் எதையும் விளைவிக்கக்கூடிய, ஆனால், தண்ணீருக்கு ஏங்கி நிற்கும் ஆயிரம் பதினாயிரம் ஏக்கர் நிலங்கள் நமக்கு உண்டு. இங்கு மட்டும், அங்கு இருப்பதுபோல தண்ணீர் இருக்குமானால் இந்த முழு உலகத்தையும் போஷிக்க முடியும். இதனால் அது பாதிக்கப்படாது. ஏனெனில் அவைகள் ஊற்றுக்களினால் நிரப்பப்படுகின்றன. அது வடிந்தவுடன் அதே அளவுக்கு வந்துவிடும், ஏனெனில் புவியீர்ப்பானது அங்கே அதை பற்றி நிறுத்துகிறது. நல்லது, இப்போது நீங்கள் மட்டும் புவியீர்ப்பு விதியின்படி வேலை செய்வீர்களானால், இந்த மகத்தான ஏரிகளின் தண்ணீரை அங்கிருக்கிற முழு தேசத்திற்கும் கொண்டு சென்று முழு உலகத்தையும் போஷிக்கலாம். யாரும் பட்டினியாய் இருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் இங்கே இருந்து கொண்டு, “ஆம், நான் அதை காண்கிறேன் நிச்சயமாக” என்று கூறமுடியாது. நீங்கள் போய் அதை செய்ய வேண்டும். 12நல்லது, தேவனுடைய சட்டமும் அந்த விதமாகவே உள்ளது. விசுவாசமே தேவனுடைய சட்டமாய் இருக்கிறது. இங்கு, இந்த காலைவேளையில் எந்த வியாதியையும் குணப்படுத்தவும், எதையும் செய்யத்தக்கதான விசுவாசத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அது ஒரு விதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. விசுவாசமே! அந்த விதி. விசுவாசமே தேவனுடைய சட்டமாய் இருக்கிறது. இயேசு கூறினார், “நீங்கள் ஜெபம் பண்ணும்போது நீங்கள் விரும்புகிற எதையும் பெற்றுகொள்வோம் என்று விசுவாசிப்பீர்களானால் அதை பெற்றுகொள்வீர்கள், அதை நீங்கள் பெற்றுகொள்ள முடியும். அதுதான் காரியம். ஆகவே அதை கட்டுப்படுத்துவது விசுவாசமே! மேலும், நமது தேவைக்கேற்றார்போல் விசுவாசம் அளிக்கப்படுகிறது. இப்போது நாம் செய்யவேண்டியது….., தேவன் விசுவாசத்தை நம்மில் சிலருக்கு ஓரளவும், மற்றவர்களுக்கு வேறு ஓரு விதமாகவும் பகிர்ந்து அளித்துள்ளார். அது நீங்கள் ஏதோ ஒரு மகத்தான இயற்கைக்குக் மேம்பட்ட வல்லமையை பெற்றிருக்கிறீர்கள் என்று அல்ல! ஏனெனில் நீங்கள் கிறிஸ்தவனாக ஆகும் போது அந்த வல்லமையை ஏற்கனவே பெற்றிருக்கிறீர்கள், ஆனால் அந்த வல்லமையை செயல்படுத்துகிற விசுவாசத்தில் குறைவாய் இருக்கிறீர்கள். 13ஆகவே இப்போது இந்த காலை வேளையில் நீங்கள் ஜெபிக்க வரும்போது, வேதாகமத்தில் கூறியுள்ளதை நினைவு கூறுங்கள். அது உண்மை யாக்கோபு 5:14 “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக் அவர்கள் (கர்த்தருடைய நாமத்தினாலே) அவனுக்கு எண்ணை பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்”. என்பதை நினைவு கூறுங்கள், நீங்கள் விசுவாசித்தால் அது ஒரு வாக்குதத்தமே, எனவே பாருங்கள், சுகமளித்தல் தனிப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்டிருக்கிறது. நசரேயனாகிய இயேசுவின் நாட்களில், அவர், அவர்களின் சொந்த விசுவாசத்திற்க்கு மாறாக மக்களை அவரால் குணப்படுத்த கூடாமல் இருந்தது. “நீ விசுவாசித்தால் என்னால் கூடும். என்னால் இதை செய்யக்கூடும் என்று நீ விசுவாசித்தால், என்னால் இதை செய்யக்கூடும்”. என்று கூறினார். உங்களால் விசுவாசிக்க கூடுமானால்! ஆகவே, சிலர் சுகமளிக்கும் வல்லமை மற்றவர்களுக்கோ, சுவிசேஷகர்களுக்கோ உரியது என்று எண்ணுகிறார்கள். அது அப்படியல்ல சுகமளிக்கும் வல்லமை உங்களுக்குள் இருக்கிறது. அது உங்களுக்குள் இருக்கிறது. அவர்கள் வண்டியை அப்படியே குதிரையின் முன் வைக்கின்றனர். சுகமளிக்கும் வல்லமை சுவிசேஷகர்களிடத்தில் இல்லை. பரிசுத்த ஆவி சுகமளிக்கும் வல்லமை உடையவராய் இருக்கிறார், நீங்கள் அந்த பரிசுத்தஆவியை பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அந்த சிறிய மரமாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான எல்லாம் உங்களுக்குள் இருக்கிறது. ஆகவே தேவனுடைய வாக்குத்தத்தங்கள் “அது சத்தியம்! அவர் சுகமாக்குவதாக தேவன் சொன்னார். அவருடைய தழும்புகளினால் நான் சுகமானேன்” என்று கூறிக் கொண்டே அதிலிருந்து பருக ஆரம்பியுங்கள். அதுதான் காரியம், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? சுகத்தை வெளியே உந்தி தள்ள ஆரம்பியுங்கள் அவ்வளவு தான் பாருங்கள். நீங்கள் எதை பெற்றிருக்கிறீர்கள், என்பதை மற்றவர்கள் காணமுடியும், 14இப்போது அது என்ன…… விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது. (எபி. 11:1) நான் அந்த சிறு மரத்தை வெளியே வைத்திருக்கக் கூடும். நான் அங்கே ஆப்பிள்களை பார்க்கவில்லை, ஆனால் அவை அங்கே இருக்கின்றன. அந்த சிறு மரத்திற்கு அவை அங்கே இருக்கின்றன என்று தெரியும். ஆக அது பருகஆரம்பித்து உந்தி தள்ளிக் கொண்டு, தள்ளுகிறது. ஏனெனில், அது அறிந்திருக்கிறது. “அவைகள் எனக்குள் இருக்கிறது கொஞ்ச காலத்தில் அதை கொடுப்பேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், வெறுமனே என்னை கொஞ்ச காலம் வைத்திருங்கள், சிறிது காலத்திற்கு பின் அவற்றை வெளிக் கொண்டு வருவேன்.” அது அவ்வாறு பருகிகொண்டே இருக்கிறதை நான் அறிவேன். மேலும் முதலாவது காரியம் தெரியும், இதோ அவைகள் வருகிறது. இதோ ஆப்பிள்கள் வருகிறது, ஏனெனில் அவைகள் தனக்குள் இருக்கிறது என்று அது விசுவாசித்தது. உன்னை சுகமாக்கத்தக்கதான பரிசுத்த ஆவியின் வல்லமை உனக்குள் இருக்கிறது என்று நீ விசுவாசித்தால், அவைகள் அங்கே தானே இருக்கிறது. வெறுமனே உந்தி தள்ளிக் கொண்டேயிரு. பாருங்கள்? உங்களுக்கு விசுவாசம் உண்டு. நீங்கள் சரியாக இப்போதே அதன் பலனை காணமுடியாது. நீங்கள் அதை பார்க்காதிர்கள். 15இப்போது பாருங்கள், யாக்கோபு, ஆபிரகாமை அவனுடைய கிரியைகளினால் நீதிமானாகக் கண்டான். பவுல், ஆபிரகாமை அவன் விசுவாசித்தினால் நீதிமானாகக் கண்டான். இவர்கள் இருவரிடையே உள்ளதைப் பற்றி நாம் என்ன சொல்லுவோம்?ஆபிரகாம் பேசுகிறான் எதின் மேல்… அதாவது, பவுல், தேவன் ஆபிரகாமில் கண்டதை பேசுகிறான். மேலும் யாக்கோபு, ஜனங்கள் ஆபிரகாமில் கண்டதை பேசுகிறான் பாருங்கள்? இப்போது, பாருங்கள்?. ஆகவே, குழந்தை பிறப்பதற்கு முன்னமே ஆபிரகாம் விசுவாசத்தை உடையவனாய் இருந்தான் என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும் ஆபிரகாம் தான் மலடாய் இருக்கும்போதே, குழந்தை பிறக்கபோகிறது என்ற விதமாய் நடந்து கொண்டதின் மூலம் அதை அவன் தேவனுக்கு நிரூபித்தான். அவன் பிள்ளையில்லாதிருந்தான். அவனுடைய மனைவியின் கர்ப்பம் செத்ததாயிருந்தது, அவனும் மலடாய் இருந்தான். ஆனால், “அதற்குள் எங்கோ குழந்தை இருக்கிறது என்று மட்டும் அறிந்திருந்தான். நீங்கள் பாருங்கள், தேவனுடைய மகத்தான எல்ஷடாயின் மார்பின் மேல் சாய்ந்து வாக்குதத்தங்களை அவன் குடித்து கொண்டே இருந்தான்;. அங்கே அவன் சாய்ந்து, தேவன் அவனுக்கு கொடுக்கிறவர் என்றும், அது ஒரு வாக்குதத்தம் என்றும் மேலும்; அவர் அதை செய்துதான் ஆகவேண்டும் என்றும் அறிந்தவனாய் குடித்துக் கொண்டேயிருந்தான். நாமும் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறோம். ஆகவே, நாமும் தேவன் அதை செய்வார் என்று அறிந்தவர்களாய், அதை பற்றிக்கொண்டு, அவருடைய வாக்குதத்தங்களின் மேலேயே சார்ந்திருப்போமாக. அவர் அவ்விதமாகவே சொல்லி இருக்கிறார். நீங்கள் அதை இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்கிறார்கள்.- ஆசி) பிறகு, ஜெபிக்கப்பட விரும்புகிற சுகவீனர்கள், ஏதாவது ஒரு பக்கத்திலோ, மறு பக்கத்திலோ வரிசையாக நிற்க்கட்டும். மூப்பர்கள் இங்கு வந்து அவர்களை எண்ணையால் அபிஷேகிப்பார்கள். நான் அவர்கள் மேல் கரங்களை வைத்து ஜெபிப்பேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் சுகப்படுத்துவார் என்று நாம் விசுவாசிப்போம். “நீங்கள் விசுவாசிக்க கூடுமானால்” டெட்டி (Teddy) எங்கே இருக்கிறாய்? சுற்றி வலது பக்கத்திலே வா. அது நல்லது. நம்பிடுவாய் என்ற பாடலை நீ வாசிக்க விரும்புகிறேன். அவர்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மற்ற சபையார் யாவரும் தம் தலைகளை தாழ்த்தி, வந்து கொண்டிருக்கிற மக்களுக்காக ஜெபிப்போம். 16எங்கள் பரலோக பிதாவே, மகா சுகவீனமான, பயங்கரமான, அழிவின் நிலையில் இருக்கிற இந்த பரிதாபமான, கஷ்டப்படுகிற மனுகுலத்தை இந்த காலை வேளையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். நான் உம்மை விசுவாசிக்கிறேன். கர்த்தாவே நான்-நான் உம் வார்த்தை சத்தியம் என்று அறிந்துள்ளேன். அவைகள் சத்தியமே! அவைகள் தேவனுடைய நித்தியமான என்றென்றைக்குமுள்ள வார்த்தையாய் இருப்பதினால், அவைகள் விழுந்து போகமுடியாது. அவைகள் அவரில் ஒரு பாகமாய் இருக்கிறபடியால் தேவனைப் போலவே அவைகள் முழு வல்லமையுடையது, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். (யோ.1:1,14) “இப்போது நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடும், எங்கள் முழு ஆத்துமாவோடும; எங்களுக்குள் உள்ள யாவற்றோடும் அதை விசுவாசிக்கிறோம். கர்த்தாவே நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். மேலும் அவர்களுக்குள் தேவ வல்லமை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, அறிந்து கொள்ளத்தக்கதாக நான் மிகவும் எளிமையாய், குழந்தை புரிந்து கொள்ளும் வழியில் அதை அவர்களுக்கு சமர்ப்பிக்க முயற்சித்திருக்கிறேன். அவர்கள் மட்டும் விசுவாசத்துடன் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றக் கூடுமானால்… அவ்விதமாகத்தான் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் வந்து, இந்த வேதத்திலுள்ள அப்போஸ்தலர் நடபடிகள்; 2-ஆம் அதிகாரத்தின் படி தங்களின் பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். பிறகு பேதுரு, “நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்”, என்றார்…. மேலும் இங்கே அது அப்படியே வந்தது. ஏனெனில், அது தேவனுடைய வார்த்தை பிரத்தியட்சமாகுதலாகும். நல்லது, இப்போது, அதே விதமாக பிதாவே, நாங்கள் பிணியாளிகளை எண்ணையால் அபிஷேகித்து ஜெபிக்கும் போது அது உண்மை என்று அறிவோம். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும். தேவன் அவர்களை எழுப்புவார்”. (யாக்.5:15) தேவனே இந்த காலை வேளையில், பலிபீடத்திலிருந்து கடந்து போகிறவர்களும் இந்த இடத்தை சுற்றியுள்ள ஒவ்வொருவரும், தேவன் தங்களை சுகப்படுத்தினார் என்பதை அறிந்தவர்களாய் மிகவும் சந்தோஷத்துடனும், களிப்புடனும் கடந்து போவார்களாக. “சென்று சுகமாய் இருப்பீர்களாக” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களை அதற்காக இப்பொழுது உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம். ஆபிரகாமை போல “இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைத்து” அந்த தரிசனத்தை, பிடித்துக் கொண்டு, அதன் அர்த்தத்தை அறிந்து ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக! அதன் பலன் என்னவாயிருந்தாலும் அது பொருட்டல்ல, அது விசுவாசத்துடன் இணைந்து செய்வதற்கு ஒன்றுமில்லை. பலன்கள் ஒன்றுமில்லை. விசுவாசம் ஏற்கனவே பற்றி பிடித்திருக்கிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது”. (எபி. 11:1) தேவனே அவர்களுக்கு நீர் அவசியமாயிருக்கிறபடியால் அவர்கள் இருதயதிற்குள் அது ஆழமாக பதிவதாக. நான் உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனாக சென்று, மற்ற ஊழியக்காரரோடு இங்கே நின்று, தேவனே எங்கள் இருதயத்தை இந்த வியாதியுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்க வைத்தருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 17சகோதரன் எஸ்டல் பீலர் (BroEstel Beelar) இந்த கட்டிடத்திற்குள் இருந்தார், என்று யாரோ கூறினார்கள். இந்த காலையில் இங்கிருக்கிற வேறு ஒரு ஊழியக்காரர் ஜெபத்திலே நடத்தினார்… என்று நம்புகிறேன். இங்கிருக்கிற எல்லா ஊழியக்காரர்களும் அவர்கள் யாராயிருந்தாலும், நீங்கள் மேலே வந்து இந்த பலிபீடத்தை சுற்றி எங்களோடு நிற்க உங்களை விரும்பி கேட்டுக்கொள்கிறேன், சிறிது நேரம், பிறகு தயவுசெய்து சகோதரர்களே! மேலும், மனிதர்கள்…….. சகோ. பென் (Bro Ben) உமக்கு நன்றி. இந்த மக்களுடன் சேர்ந்து, அவர்கள் மேல் கரத்தை வைத்து நாம் ஜெபிக்கும்படியாக, நேராக மேலே வந்து இந்த பலீபீடத்தை சுற்றி நில்லுங்கள். இப்பொழுது, அவர்கள் பாடலை வாசிக்கும்போது, ஊழியக்காரர்கள் தங்கள் ஸ்தானத்தை இங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாம், ஒவ்வொருவரும் பிணியாளிகள் மேல் கரங்களை வைப்போம். 18அங்கே மலையின் ஊடாக அவர் கீழே இறங்கி வரும் காட்சியை நாம் பார்க்கட்டும், மற்ற மனிதர்களை காட்டிலும் எந்த விதத்திலும் வித்தியாசமில்லாத ஒரு மனிதன் இறங்கி வருவதை நான் காண்கிறேன். அவர் சிறிய மெலிந்த உடலமைப்பு உடைய ஒரு சாதாரண மனிதனே, அவர் பள்ளத்தாக்கில் நடக்கும் ஒரு காட்சியை, அவருடைய கண்கள் கீழ் நோக்கி பார்க்கிறதை நாம் காணும்போது, அது அவருடைய அப்போஸ்தலர்கள் கீழே ஒரு வலிப்பு நோயுடைய ஒரு பையனை உடையவர்களாயிருந்து, “சுகப்படுத்தும் கர்த்தாவே, அவனை சுகப்படுத்தும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாருங்கள் நீங்கள் “இவனை சுகப்படுத்தும் கர்த்தாவே, சுகப்படுத்தும்” என்று வெறுமனே கூறுவது மட்டும் அதனை செய்யாது, அதுமட்டும் அதை செய்யாது. அதற்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. “இவனை சுகப்படுத்தும் கர்த்தாவே, இவனை சுகப்படுத்தும்” பாருங்கள்?... மேலும் அதை விசுவாசிக்கும்படி என்னால் செய்ய முடிந்தால், மேலும் உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால், அந்த தரிசனத்தை நீங்களே காணும்படி நான் செய்தால், நீங்கள் சுகமடைவீர்கள். இப்பொழுது பாருங்கள் அந்த சீஷர்கள் அங்கே நின்று கொண்டு, ஒருவேளை அவனை முன்னும் பின்னும் குலுக்கி பலமாக தள்ளி. “இதை விசுவாசி சகோதரனே! இதை விசுவாசி! அல்லேலுயா! இதை விசுவாசி! இவனை சுகப்படுத்தும்! கர்த்தாவே இவனை சுகப்படுத்தும்!” என்று சொல்லியிருக்க கூடும்? ஆனால் பிசாசு அங்கேயே தரித்திருந்தான், ஏனெனில் அவனை விட்டுச் செல்வதற்கான போதுமான விசுவாசத்தை அவனால் அங்கே காண முடியவில்லை. ஆனால் அந்த மலையினூடாக ஒருவர் கீழே இறங்கி வருகிறார் அவர் மற்ற மனுஷர்களை காட்டிலும் சற்றே வித்தியாசமானவர் என்று உடனடியாக அந்த பிசாசு அடையாளம் கண்டுகொண்டான், பார்த்தீர்களா? இப்பொது, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை போன்ற அவ்வகையான மனிதர்கள் நமக்கு தேவை, ஆம், வெறும் ஒரு காட்சி பொருளாக வராமல், நம்முடைய தேவனை நேசித்து, நாம் போய் அதை செய்ய கட்டளை இடப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாய் வாருங்கள், இதுவே நம்முடைய ஊழியமாய் இருக்கிறது. 19பின்னர், அவர்கள் அந்த தகப்பனிடம் சென்று, நான் நினைக்கிறேன் வார்த்தையின் இந்த பகுதியில் இருந்துதான் அந்த பாடல் எழுதி இசையமைக்கப்பட்டிருக்கும் என்று, அவன், “கர்த்தாவே என் மகன் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் அவன் பிசாசினால் பலவிதமாய் அலை கழிக்கப்படுகிறான். அது அவனை நெருப்பிலே தூக்கியெறிந்து மற்றும் அவ்விதமான பல்வேறு தொல்லைக்குட்படுத்துகிறது” என்று சொன்னான். நான் அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன், ஆனால் அவர்களால் அவனை சுகப்படுத்த முடியாமல் போனது. (மத். 17:16) ஆனால், நான் - நான் - நான், நினைத்தேன்…. என்று சொன்னான். அவர் சொன்னார், “நீ விசுவாசித்தால் என்னால் கூடும். இப்போது அந்த வல்லமை எனக்குள் இருக்கிறது”. அவர் சொன்னார் “நீங்கள் அதை விசுவாசிக்க கூடுமானால் அதை செய்வதற்க்கு”. இந்த காலை வேளையில், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கிறவர்கள், மேலும், இரத்த புற்றுநோய் (Leukemia), மற்றும் வியாதிகள், தொல்லைகள் உடையவர்களை தேவன் கடந்து போகும்போது, அவர்களை சுகப்படுத்துவாரா? அவ்விதமாக அல்ல! இல்லை, பாருங்கள்?, இப்போது, அவர் தவறமாட்டார். நீங்கள் விசுவாசித்தால், என்னால் கூடும். அவர் என்ன சொன்னார்?. யாவும் கைகூடிடும், நம்பிடு…. இப்போது சகோதரன் டைலர், (Tyler) மேலே வாரும்….? இப்போது, அப்படியே நம்பிடுவாய், நம்பிடுவாய்… இப்போது, நான் ஜெபிக்கும் போது, ஜனங்கள் மீது உங்கள் கரங்களை வைக்கும்படி விரும்புகிறேன். அவர்களுடைய தேவை என்னவாய் இருந்தாலும் விசுவாசமுள்ள ஜெபத்தினால் அவர்களை ஆசீர்வதியுங்கள். மேலும் தொடருங்கள். சகோ நெவில் நீங்கள் எண்ணெயினால் அபிஷேகியுங்கள், மேலும் சகோதரர்கள்;….. சபையார் ஒவ்வொருவரும் தலைவணங்கி ஆழ்ந்த ஜெபத்திற்குள் இருக்க விரும்புகிறேன் நம்பிடு…. கர்த்தாவே, இரக்கமாயிரும், இந்த மக்களை சுகப்படுத்தும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென். நசரேயனாகிய இயேசுவின் நாமத்திலே…..? (சகோ நெவில் எண்ணெய்யினால் மக்களை அபிஷேகிக்கும் போது சகோ பிரன்ஹாமும் மற்ற ஊழியக்காரர்களும் வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைத்து ஜெபிக்கிறார்கள். (ஒலிநாடாவில் இடைவெளி. ஆசி) வரிசையினூடாக அநேகருடைய செயல்பாடுகளை கவனித்து பார்க்கும்போது அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தது.அந்த செயல்பாடுகளின் மேல் எப்படி பிரதிசெயல்பாடு இருந்தது, பாருங்கள். அவர்கள் எழுந்து முன்னே வந்தார்கள். அது தான் செயலாய் இருக்கிறது. அவர்கள் அந்த செயலுக்கு எவ்விதமாய் பிரதி செயலை செய்தார்கள் என்பது மற்றொரு காரியம். அவர்கள் விசுவாசிக்கிற நிலைக்கு வந்த பின், அவர்களுக்காக ஜெபிக்கப்பட்டபோது அவர்கள் சுகமானார்கள். அவர்களுடைய செயலுக்கு உண்டான பிரதிபலனை கவனியுங்கள். 20இப்பொழுது, இந்த காலை வேளையில் நமது மேய்ப்பர் நமக்காக ஒரு செய்தியை உடையவராய் இருக்கிறார் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நான் ஒரு காரியத்தை குறித்து உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன். அங்கே பலிபீடத்தண்டையில் ஒரு கத்தோலிக்க பெண் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். சில நாட்களுக்கு முன் அவளும், அவள் கணவரும் என் வீட்டில் இருந்தார்கள். சில நாட்களாய் அவளுடைய கணவரை எனக்கு தெரியும். மேலும் - மேலும் நாங்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது, அதை குறித்து ஏதோ ஒரு காரியம் இருந்தது. அங்கே தான் நாங்கள் ஒரு தரிசனத்தை பெற்றோம். வழக்கமாக சபையில் தான் தரிசனம் உண்டாகும், ஆனால் அன்று காலை வேளையிலே எனக்கு அங்கு உண்டானது, ஆகவே அது அங்கு உண்டானது. அவள் ஒரு பெண்ணாய் இருந்ததினாலும் எப்பொழுதும் கத்தோலிக்க சபை பிண்ணனியில் இருந்ததாலும்; அவளிடத்தில் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் தன் தாயாருக்காக பேசினாள். அந்த சமயத்தில் அவளுடைய தாயாரை குறித்த தரிசனத்தை நான் பார்த்தேன். அவளுடைய தாயாருடைய பிரச்சினை என்னவென்றும் பார்ப்பதற்கு அவளுடைய தாயார் எப்படி இருப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அது சரியா?, தவறா? என்பதை நிதானிக்கிறவளாய் அவள் இருந்தாள் நிச்சயமாகவே என் வாழ்நாளில் அவளுடைய தாயாரை ஒருக்காலும் நான் கண்டதில்லை. அதை அவள் அறிவாள். அந்த பெண் இன்று காலை பலிபீடத்தண்டைக்கு வந்து, நின்று, தன் பாவங்களை அறிக்கையிட்டு, கிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். அவள் இன்று காலை, பலிபீடத்தண்டையிலே அதை செய்தாள். சகோ நெவில், அறிந்திராதவராய் அவளை எண்ணெய்யால் அபிஷேகித்தார். எவ்விதமாக - எவ்விதமாக தேவன் கிரியை செய்கிறார்!. சுகவீனத்திற்காக அவளை எண்ணெய்யால் அபிஷேகித்தார். ஆனால் பரிசுத்த ஆவியின் அசைவை கவனியுங்கள். இப்பொழுது, அவள் அபிஷேகம் பண்ணப்பட்டவளாய், அவள் வியாதியாய் இல்லாமல் இருந்தும் அபிஷேகம் பண்ணப்பட்டாள். பாருங்கள் எவ்வாறு சகலமும் சரியாக கிரியை செய்கிறது என்பதை?; ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதற்கு நாம் விசுவாசித்தபடியே இப்பொழுது அவள் ஒரு கிறிஸ்தவளாய் நின்றாள். இப்பொழுது அவள், “என் தாயாருக்காக ஜெபிப்பீர்களா?” அவள் சுகவீனமாய் இருக்கிறாள் என்று கூறினாள். அதே விதமான ஒன்று. ஆகவே அபிஷேக எண்ணெய் முன்னதாக பூசப்பட்டது. நான் நினைத்தேன்; அது எவ்வளவு பொருத்தமானது. பாருங்கள், தற்பொழுதுதான் இரட்சிக்கப்பட்டவள் கிறிஸ்து நம்மெல்லாருக்காகவும் நின்றார். அவர் எல்லாருக்காகவும் நிற்கிறார். உண்மையாக இரட்சிக்கப்படும்போது கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வருகிறது என்பதை காண்பிக்கத்தக்கதாக அந்த பெண் கிறிஸ்தவளான உடனே மற்றவர்களுக்காகவும் நிற்க விரும்புகிறாள். இப்பொழுது அது மிகவும் அருமையானது. நான் - நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். அந்த விசுவாசிக்கிற கிறிஸ்துவின் ஆவியை. இப்பொழுது சற்றே ஞாபகம் கொள்ளுங்கள். 21இப்பொழுது இந்த வாலிப ஸ்திரிக்கும், அவள் இங்கு எங்கோ இருக்கிறாள், மேலும் அவளோடு வந்திருக்கிற மற்றொரு கத்தோலிக்க ஸ்திரிக்கும், இந்த ஆராதணையை நம்முடைய மேய்ப்பனிடத்தில் ஒப்படைக்கு முன் இந்த வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன், பாருங்கள் இது தான்! (சகோ. நெவில் ஆமென் என்று கூறுகிறார் ஆசி) இப்பொழுது, கத்தோலிக்க சபையானது ஒரு காலத்தில், இந்த சபையை போன்று இருந்தது. நாம் விசுவாசிக்கிற வேதாகமத்தை, நீங்கள் திரும்பி சென்று வாசிப்பீர்களானால், கத்தோலிக்க சபைதான் முதல் சபையாக இருந்தது என்பதை அறிந்து கொள்வீர்கள், அது உண்மை. ஆனால், அது வேதாகம போதனைகளில் இருந்து வழிவிலகி போனது. இது தான் (வேதாகமம்) கத்தோலிக்க சபையின் போதனையாய் இருந்தது. ஆனால், பாருங்கள் இந்த வேதாகமத்தை போலவே பரிசுத்தமாய் அவர்கள் கருதுகிற, போப்புகளும், மற்றவர்களும் எழுதி இருக்கிற அறநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் அவர்களுக்கு உண்டு. ஆகவே, பாருங்கள், இது என்ன, நீங்கள் மாறவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் நீங்கள் மனம் மாறி இருக்கிறீர்கள். பாருங்கள?; இப்பொழுது நீங்கள் பார்ப்பீர்களானால்…. நிச்சயமாகவே, 22உங்களில் சிலர் கத்தோலிக்கர்களாகவும் இருக்கலாம் என்று யூகிக்கிறேன். இந்த காலை வேளையிலே அந்த இரண்டு ஸ்திரிகள், மற்றும் சில கத்தோலிக்க புருஷர்களும் இங்கே இருக்ககூடும். நீங்கள், சபை வரலாற்றை திரும்பி பார்த்தால், “வேதாகமத்தில் இருக்கிற இந்த அப்போஸ்தலரின் நடபடிகள், அவ்விதமாக இருந்தார்களா?. அவர்கள் தான் ஆதி கத்தோலிக்கர்களா?” என்று உங்கள் குருக்களை கேட்டால்; அவர் “ஆம்” என்று கூறுவார். அது உண்மை, அவர்கள் அப்படி தான் இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள், எவ்விதமான மார்க்கத்தை பெற்றிருந்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் சிறிய எளிமையான இடங்களில் கூடினார்கள், அவர்கள் ஒரு போதும் “மரியே வாழ்க” அல்லது “எங்கள் பிதாவே” என்று கூறினதில்லை, அது சபையின் பாரம்பரியமாய் இருக்கிறது. அவர்கள் என்ன கூறினார்கள்?. அவர்கள் தேவனை துதித்தார்கள், அவர்கள் கூச்சலிட்டார்கள், அவர்கள் அழுதார்கள். 23அப்போஸ்தலர் நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தில் பாருங்கள், பரிசுத்த பேதுருவும், யாக்கோபு மற்றும் யோவான், மற்றும் யாவரும் ஒன்று கூடி இருந்தபொழுது அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் கூச்சலிட்டு, அவ்விதமாக நடந்துகொண்டு, குடித்தவர்களைப் போலவும், மேலும், வெளி உலகம் “இவர்களெல்லாரும் மதுபானம் குடித்திருக்கவில்லையா”? என்று கேட்கத்தக்கதான அளவிற்கு அவ்வளவாய் ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அதன் பின் பேதுரு, அந்த அப்போஸ்தலன் அந்த பரிசுத்த தூயபேதுரு, அவன் எழுந்து நின்று “ஜனங்களே, சகோதரர்களே, இந்த மனிதர்கள் மதுபானத்தினால் வெறி கொண்டவர்கள் அல்ல! ஆனால் அவர்கள் ஆவியினால் நிரம்பி இருக்கிறார்கள்” என்று கூறினான். மேலும் - மேலும் இந்த வேதாகமம் அவர்கள் அவ்விதமாக இருந்தார்கள் என்று கூறுகிறது. இப்பொழுது, அவர்களுடைய போதனைகளின்படி அது தான் ஆதிகத்தோலிக்க சபையாய் இருந்தது. இப்பொழுது நீங்கள் பாருங்கள், ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு பிறகு கனவான்கள் (சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள்) சபைக்குள் நுழைய ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் முதலாவது ஸ்தாபனத்தை கி.பி.606-ல் நிசாய ஆலோசனை சங்கத்தில் உண்டாக்கினார்கள். அவர்கள் உருவாக்கின…. ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் நடைபெற்ற நிசாயா ஆலோசனை சங்கத்தில் எல்லா பெரிய கனவான்களையும் உள்ளே கொண்டு வந்து வெறுமனே, ஒரு சபையை தோற்றுவித்து ஒரு சபையை உண்டாக்கினார்கள். அதன்பின் அது நான்கு அல்லது ஐந்து முறை உடைந்தது. அவர்கள் அதை உடைத்துபோடு மட்டுமாக அதனுள் சென்று அதிலிருந்து வெளியேறி, பிஷப்பிற்கும், பிஷப்பிலிருந்து போப்பிற்கும் சென்று மேலும் அதிலிருந்து கிரேக்க சம்பிராதய சபை மற்றும் பலவிதமான சபைகளாக வந்தார்கள். மேலும், இன்று நீங்கள் காண்பது என்ன? அது வெறும் எல்லாவிதத்திலும் உடைந்து போனவைகளே! 24ஆனால் நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? என் கத்தோலிக்க நண்பனே! பாருங்கள், நாங்களும் கூட கத்தோலிக்கர்கள் தான். நாங்கள் ஆதி துவக்க கத்தோலிக்கர்களாய் இருக்கிறோம். பெந்தேகோஸ்தே ஆசீர்வாதத்தை விசுவாசித்து பெந்தேகோஸ்தே என்று எங்களை சொல்லிக் கொள்கிறபடியால், சபையானது அநேகமாக எங்களை அவ்விதமாகவே அழைக்கின்றது. அங்கே தான் அந்த கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. மேலும், நம்முடைய பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களில் இன்று, ஒருவேளை இந்த உலகம் இன்னும் ஐநூறு ஆண்டுகள் நிலைத்திருக்குமானால், இந்த பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் இன்று இருக்கிற ரோமன் கத்தோலிக்க சபையைவிட அதிகம் சம்பிரதாய சபையாகிவிடும். அது அந்த விதமாகவே தூரமாய் வழி விலகி சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் அவ்வாறு ஸ்தாபித்தபோது, அதை விடுதியாக்கி (lodge) விட்டார்கள். அதன் பின் மனம் மாறாத ஆத்துமாக்களை உறுப்பினர்களாய் கொண்ட விடுதியாகி போனார்கள். என் விலையேறபெற்ற என் அருமை சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில் உலகத்துக்கும், இந்த சபைக்கும் இதுவரை நான் சொன்னதில்லை. ஆனால் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக நான் உங்களுக்கு சொல்லுகிறேன். “இது தான் வெளிச்சம் இதனுள் நடவுங்கள்”. (சபையார் களிகூர்ந்து “ஆமென்” என்கிறார்கள் ஆசி).